பிக்சல் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோரது தயாரிப்பில் நிகில் சித்தார்த்தாவின் 20 வது படம் உருவாகி வருகிறது.பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நிகில் சித்தார்த்தாவின் பிறந்த நாளில் வெளியாகியுள்ளது.
தமிழ்,தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்துக்கு சுயம்பு, என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் .’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நிகில் சித்தார்த் போர்க்களத்தில் குதிரையில் கம்பீரமாக பாய்ந்து செல்லும் ஒரு துடிப்பு மிக்க பயமரியா மூர்க்கமான போர் வீரனாக நீண்ட முடியுடன்,ஒரு கையில் ஆயுதம் (ஈட்டி) மற்றும் மற்றொரு கையில் கேடயத்துடன் காணப்படுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது.
நிகிலின் கேரியரில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் சுயம்பு. இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்