ஜென்டில்மேன் -2 பட அறிவிப்பை வெளியிட்ட கே டி குஞ்சுமோன், இந்த படத்தின் நாயகன் (சேதன் சீனு ) நாயகி நயன்தாரா சக்கரவர்த்தி, குறித்த அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டார் இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணியுடனான சந்திப்பு குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார்
‘நாட்டு நாட்டு.. ‘ பாடலுக்காக ‘பெஸ்ட் ஒரிஜினல் சாங்’ ஆஸ்கர் விருதை பெற்று உலகமே கொண்டாடி வரும் இசையமைப்பாளர் #M.M.கீரவாணி, ‘ஜென்டில்மேன் ‘ K.T.குஞ்சுமோன் தயாரிப்பில் “ஜென்டில் மேன்-2” படத்தின் மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் .
இதன் அடுத்த கட்டமாக, இப்படத்தின் டைரக்டர் ஏ..கோகுல் கிருஷ்ணா ஐதராபாத்திற்கு சென்று முழு கதையையும் கீரவாணிக்கு நேற்று சொல்லியுள்ளார் . கதையை கேட்ட இசையமைப்பாளர் கீரவாணியும் கதை பிரமாண்டமாக இருக்கிறது.. அடுத்த மாதமே கம்போசிங் ஆரம்பித்து விடலாம் என்று கூறிவிட தற்போது ஜென்டில்மேன் -2 முதல் கட்ட படப்பிடிப்பிடிப்புக்கான வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது