ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கோடம்பாக்கத்தில் செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது சில நாளிதழ்களில் இன்று காலை வெளியான செய்திகளில், சௌந்தர்யா-அஸ்வின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விரைவில் பரஸ்பரம் விவாகரத்து கோரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஜினிக்கு மிக நெருக்கமானவர்கள் கூறியதாவது, இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும் இருவரும் சில காலமாக பிரிந்துதான் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இந்த நட்சத்திர தம்பதிகளின் நண்பர்களும், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய முயன்று வருவதாகவும் கூறினார்கள் அதே சமயம் இதுவரை சௌந்தர்யா விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.