நடிகர் தனுஷ் நடிப்பில், அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இதில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான், ஷிவ ராஜ்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் நடந்த போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த னர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு அருகில் ஷூட்டிங் நடத்தப்படுவதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் கொடுத்தனர். இப்பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டு, தற்போது மதுரையில் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மதுரையில் தனுஷ் காலையில் ஜாகிங் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என தெரிகிறது.
🔥🔥🔥 #CAPTAINMILLER @dhanushkraja pic.twitter.com/rrjnvLoI0t
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) June 3, 2023