உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த படத்திற்கு உடல் ரீதியாக தயாராகி வருகிறார்.
முதல் கட்டமாக மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் சண்டை பயிற்சி கற்றுக் கொள்வதற்காக தாய்லாந்து சென்ற சிம்பு தற்போது உடல் ரீதியாக தனது கேரக்டரை மெருகேற்ற லண்டன் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லண்டன் வீதிகளில் நடந்து செல்லும் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.