சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். சமீபத்தில் ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதர் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வினுக்கும் ஒரு கௌரவ பதவி கிடைத்துள்ளது. அதாவது, இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.. இதனால் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதே சமயம் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை முற்றிலும் ஒழித்து கட்டும் படியான வேலைகளில் தீவிரம் காட்டும் படியும் அறிவுறுத்தபட்டுள்ளதாகாவும் கூறப்படுகிறது.