ராதா மோகன் இயக்கத்தில், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த ‘பொம்மை’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நம்ம எல்லாருக்கும் ஒரு கற்பனை உலகம் இருக்கும், அதில் நாம் நினைத்த மாதிரி வாழ்ந்து கொண்டிருப்போம், என்ன நமக்கு அதோட லிமிட் தெரியும், ஆனால் ராஜூவுக்கு அது தெரியவில்லை, அவன் அந்த கோட்டை தாண்டி விட்டான் என்ற ட்ரெய்லரில் உள்ள வசனத்திலிருந்து இந்த படத்தின் கதை.அதாவது, சைக்கோ இளைஞன் ஒருவனை பற்றிய கதை என்பது நமக்கு தெளிவாகவே புரிகிறது.
ஜவுளிக்கடை பொம்மைகளின் மீதுள்ள ஈர்ப்பால் அவைகள் உயிருடன் இருப்பது போலவே கற்பனை செய்து கொண்டு ஒரு பொம்மையுடன் மனதளவில் வாழ்ந்து வரும் அந்த சைக்கோ இளைஞனின் நிலை முடிவில் என்னவாகிறது என்பது தான் இப்பட த்தின் கதை.
ஏஞ்சல் ஸ்டுடியோஸ் படநிறுவனம் சார்பில் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.