நடிகர் சூர்யா தற்போது ’கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.
10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ள இப்படத்தில், சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதையடுத்து கிடைத்த சின்ன இடைவெளியில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் டென்மார்க் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு உள்ள ஃபரோ என்ற தீவில் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
டென்மார்க் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு சூர்யா சென்னை திரும்பியதும் ’கங்குவா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
இப்படத்தின் சில காட்சிகளை பார்த்த இந்த படத்தின் வசனகர்த்தா மதன் கார்க்கி கூறுகையில்,”’கங்குவா’ சிறுத்தை சிவாவின் ரெகுலர் படம் கிடையாது அவர் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்ட படமாக தான் ’கங்குவா’ இருக்கும்.
சூர்யாவின் நடிப்பு, சிறுத்தை சிவா அவரை கையாண்டிருக்கும் விதம் என எல்லாமே புதுமையாக இருக்கும். படத்தில் நிறைய புதிய விஷயங்கள் உள்ளது என கூறியுள்ளார்.