துணிவு படத்தை தொடர்ந்து அடுத்த தாக மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62 வது படமான விடா முயற்சியில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஏகே மோட்டார் ரைடு’ என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் தொடங்கி இருப்பதாக அஜித் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்,
இந்த நிறுவனத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் , சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ‘ஏகே மோட்டார் ரைடு’ என்ற தனது நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பல கோடி செலவில் அதி நவீன மோட்டார் பைக்குகளை வாங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் செய்திகள் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் தனது நிறுவனத்திற்கு இதுவரை மொத்தம் 8 அதி நவீன பைக்குகளை ஆர்டர் செய்திருப்பதாகவும் இந்த பைக்குகள் ஒவ்வொன்றின் விலை ஒரு கோடிக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பைக்குகளுக்கு வாடகையாக ரூ.8 லட்சம் வரை வசூலிக்க ‘ஏகே மோட்டார் ரைடு’ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.