நடிகர் பிரபாஸூடன் இணைந்து ஆதிபுருஷ் படத்தில் சீதாவாக நடித்துள்ளார் கீர்த்தி சனோன். இப்படம் ஜூன் 16ந் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் போது ஒரு இருக்கை மட்டும் ஆஞ்சநேயருக்காக காலியாக விட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு படக்குழுவினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தின் முன்னோட்ட விழா நேற்று திருப்பதியில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலையே திருப்பதி வந்த பிரபாஸ்,நேராக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், இன்று காலை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ரவுத் ஆகியோர் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அப்போது, கோவில் பிரகாரத்தில் கீர்த்தி சனோன் நடந்து வந்த போது, இயக்குநர் ஓம் ராவத் கீர்த்தி சனோனுக்கு கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
இயக்குநரின் இச் செயல் அங்கிருந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சாமி கும்பிட வந்த இடத்தில் இப்படியா நடந்து கொள்வது என நெட்டிசன்கள் இயக்குநரை ஏகத்துக்கும் வசைபாடி வருகின்றனர்
இந்த முத்த விவகாரத்தால் ஆதிபுருஷ் இயக்குநர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.’