லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும், ‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தளபதி 68’ படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் – வெங்கட் பிரபு – யுவன் ஷங்கர் ராஜா என்ற புது கூட்டணியில் விஜய்யின் 68 வது படம் உருவாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் பூஜை வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் நடத்தப்பட்டு, வரும் ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும்,அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.
இப்படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. குஷி படத்தின் மூலம் முதல்முறையாக இணைந்த விஜய் மற்றும் ஜோதிகா ஜோடி, திருமலை படத்திலும் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தளபதி 68 படத்தின் மூலம் இவர்கள் இணைவதாக வெளியாகி வரும் செய்திகள் அவர்களது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து படத்தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை .