நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் ஆன நிலையில், அடுத்த 4 மாதங்களிலேயே இருவரும் வாடகைத் தாய் மூலமாக இரட்டைக்குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என குழந்தைகளின் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடந்த விசாரணையில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி.எல்லாமே சட்டப்படி நடந்ததாக தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தனர் .
இந்நிலையில்,தங்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு காலம் ஆகி விட்ட சந்தோஷத்தை இருவரும் கொண்டாடி வருகின்றனர்.
நடிகை நயன்தாரா தனது உயிர் மற்றும் உலகம் என இரு ஆண் குழந்தைகளையும் மார்போடு அணைத்த படி இருக்கும் செம க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் திருமண நாள் குறித்தும் நயன்தாரா குறித்தும் கூறியுள்ளதாவது,. ’என் உயிரின் ஆதாரமே நீங்கள் தான், ஒரு வருடம் நிறைய தருணங்கள் நிறைந்தது, ஏற்றத்தாழ்வுகள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனையான நேரங்கள் இருந்தது. ஆனால் அபரீதமான அன்பு பாசம் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் என் குடும்பத்தில் இணைந்தீர்கள்.கனவுகள் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலும் உன்னால் எனக்கு கிடைக்கிறது.
என் உயிர் மற்றும் உலகங்களுடன் சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக வைத்து இருக்கிறேன். குடும்பம் கொடுத்த பலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது போல் தெரிகிறது. ஒரு நல்ல வாழ்க்கையை, தேவையான ஊக்கத்தை கொடுத்த உனக்கு என்னுடைய நன்றி என பதிவிட்டுள்ளார், விக்னேஷ் சிவனின் இந்த எமோஷலான பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.