சூர்யா விக்னேஷ்சிவன்-அனிருத் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 36- வது படத்திற்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது.இதை விக்னேஷ் சிவன் -அனிருத் ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் படபிடிப்பு அடுத்தமாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது படக்குழு!