இன்னொரு வாரிசு அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு பாடக்குழு தலைவர் லியோனியின் மகன் லியோ சிவகுமார்தான் கதாநாயகனாக மேக் அப் போட்டுக்கொண்டிருக்கிறார்.
நாயகனாக நடித்துள்ள படம் ‘அழகிய கண்ணே.!’
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.பெரிய கம்பெனி. விஜய்யின் உறவுக்காரர். நெருங்கிய சொந்தம்.கம்பெனியின் பெயர் எஸ்தெல் எண்டெர்டெயினர் .கண்ணன் ரவி குரூப் வெளியிடுகிறது.
இயக்குநர் ஆர்.விஜயகுமார்.
சஞ்சிதா ஷெட்டி ,இயக்குநர் பிரபு சாலமன் ,மற்றும் பலர் நடிகர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.விஜய சேதுபதி சிறப்புத் தோற்றம்.
இதற்கு காரணம் இருக்கிறது.
பிரபல இயக்குநர் சீனு ராமசாமியின் தம்பிதான் இயக்குனர் விஜயகுமார்.
இந்த படத்தை பிரபல படுத்துகிற பொறுப்பை பி.ஆர்.ஓ .சதிஷ் (எய்ம் ) குழுவினர் ஏற்றுள்ளனர்.
அழகிய கண்ணே என்கிற கவித்துவமான டைட்டிலில் வெளியாகும் இந்த படத்தின் முன்னோட்ட விழா பிரசாத் லேப்பில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களில் பாரதிராஜா வரவில்லை.இமயம் ஓய்வு எடுப்பதாக சொன்னார்கள்.. கே.எஸ்.ரவிக்குமார் வந்திருந்து வாழ்த்தினார்.
திண்டுக்கல் லியோனின் மொத்த குடும்பமும் விழாவுக்கு வந்திருந்தது.
மகனையும் மற்றவர்களையும் வாழ்த்திப்பேசிய லியோனி தன்னுடைய நெடுங்காலத்து சந்தேகத்தை கேட்டுவிட்டார்.
அதாவது “படையப்பாவில் கொடூர உள்ளம் கொண்ட கேரக்டர் .ரம்யா கிருஷ்ணனுக்கு.! அந்த கேரக்டருக்கு எப்படி சார் நீலாம்பரி என்கிற அழகிய ராகத்தின் பெயரை வைத்தீர்கள் ?”என்று ரவிகுமாரிடம் கேட்டார்.
“அந்த பேரை நான் வைக்கலிங்க .. ரஜினி சார் வெச்சார் ” என்று பரபரப்புடன் ரவிகுமார் பதில் சொன்னார்.
அந்த படம் வெளிவந்தபோது தமிழக அரசியலில் ரஜினி பேசிய வசனங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பேசிய வசனங்கள் அதிமுக தலைவி ஜெயலலிதாவை குறிப்பிடுவதுபோலவே அமைந்து இருந்தது.