உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், பதான் படத்தின் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தளித்தார். இந்தியத் திரையுலகின் வசூல் சாதனைகளை முறியடித்து மிகப்பெரும் பிளாக்பஸ்டராக பதான் அமைந்தது.
தற்போது அட்லீயின் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார்.
இந்நிலையில்,நடிகர் ஷாருக்கான் சமூக ஊடகங்கள் வாயிலாக தன் ரசிகர்களுடன் ஒவ்வொரு மாதமும் உரையாடி வருகிறார். அதில் அவர் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளித்து வருகிறார், அந்த வகையில், இன்று மற்றொரு #AskSRK அமர்வை ஷாருக்கான் நடத்தினார் ரசிகர்களுடனான இந்த நிகழ்விலும் அவரது பதில்கள் வெகு சிறப்பாக அமைந்தது.
ஒரு ரசிகர் ஷாருக்கானின் அன்றைய மாலை நேரத் திட்டத்தைப் பற்றிக் கேட்டார், அதற்கு நடிகர் ஷாருக்கான், “ஜவானை இயக்குநர் அட்லீயுடன் பார்க்கலாம்” என்றிருக்கிறேன் எனப் பதிலளித்தார்.
மற்றொரு ரசிகர் ஷாருக்கானிடம் டன்கி அல்லது ஜவான் எந்த திரைப்படம் உடல்ரீதியாக மிகவும் சவாலானதாக இருந்ததாகக் கேட்டார், அதற்கு அவர், “நிச்சயமாக ஜவான் நிறையச் சவால்கள் மிகுந்த படைப்பாக இருந்தது” என்று பதிலளித்தார்.
மேலும் ஷாருக்கானின் ரசிகர் ஒருவர் ஜவானை விரைவில் தங்களுக்கு காட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தார், அதற்கு நடிகர் ஷாருக்கான் “செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்” என்று கூறினார்.
எங்கள் ஜவான் வில்லனைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என ஒரு ரசிகர் ஷாருக்கானிடம் கேட்டார், அதற்கு அவர், “@VijaySethuOffl எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மற்றும் ஜவானில் அவர் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் என்றார்” ஷாரூக்கானுடனான ரசிகர்களின் இந்த டுவிட்டர் சந்திப்பு சமூக வலைத்தளங்களால் வைரலாக பரவி வருகிறது.