எம்.360° ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ரோஷ் குமார் தயாரித்து வரும் புதிய படம், சமரன். நடிகர் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தில்,எதிர் கதாநாயகனாக மலையாள நடிகர் ஆர். நந்தா கமிட் ஆகியுள்ளார்.
இவர்களுடன் சிங்கம் புலி, சின்னத்திரை ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது
இந்நிலையில்,இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு,சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு இருப்பதாகவும்,. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் அதிரடி காட்சிகள். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் இப்படத்தின் தயாரிப்பு தரப்பினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ படம்.
சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால் பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் பரபரப்பான திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவை குமார் ஸ்ரீதர் கவனிக்க,வேத் சங்கர் சுகவனம் இசையமைத்து வருகிறார்.,