உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படு பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து,கமல்ஹாசன் தனது 233’ படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை முழுவதும் எச்.வினோத் தயார் செய்து கமல்ஹாசனிடம் காட்டிய போது அதில் கமல் சில மாற்றங்களைச் சொல்ல, இதையடுத்து தற்போது அதில் சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்யும் பணிகளிலும் எச்.வினோத் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ள நடிகர் நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருவதாகவும்,மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு ஒரு குழு அமைக்கப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
எச்.வினோத்தின் முந்தைய படங்களைப் போலவே இந்த படத்திலும் ஒரு முக்கிய சமூக கருத்து வைக்கப்பட்டு உள்ளது என்றும்,இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள்தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மணிரத்னமும், கமல் ஹாசனும் இணையும் படம் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லையே என ஏங்கும் ரசிகர்களுக்கு கமலின் 234 வது படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குனர் மணிரத்னம் கொடைக்கானலில் இருக்கும் தனது வீட்டில் இருந்தபடி கமல்ஹாசனுடன் இணையும் மாஸ் படத்துகான கதையை தயார் செய்யும் பணியில் மணிரத்னம் தனது குழுவினருடன் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார் என்கிறது கமல் வட்டாரம்.
கமல் -எச் வினோத் கூட்டணியில் குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அநேகமாக நவம்பர் மாதம் கமல்,மணிரத்னம் கூட்டணியில் இணைவார் என்கிறார்கள்.