திமுகவை சீண்டி பார்த்தால் தாங்க மாட்டீங்க.. செந்தில் பாலாஜி கைது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது ” வழக்கமாக நான் உங்களில் ஒருவன் பதில்கள் மூலமாக உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால் இந்த வீடியோ மூலமாக வேறு ஒரு விஷயத்தை பேசப்போகிறேன். அமலாக்கத்துறை மூலமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்படும் அந்நியாயமான தொல்லைகளை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது அப்பட்டமாக அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வழக்கில், 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதய நோய்யை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?
செந்தில் பாலாஜி மீது புகார் மற்றும் அது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் என்றால் அவரை அழைத்து விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் அல்ல. அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ. அதுவும் 5 முறை தேர்வு செய்யப்பட்டவர். 2 வது முறையாக அமைச்சராக இருக்கிறார். தினமும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர். அப்படிபட்டவரை எதோ தீவிரவாதியைப் போல் அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது? அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்தபோது முழு ஒத்துழைப்பையும் அவர் தந்தார். எந்த ஆவணங்களை அவர்கள் எடுத்திருந்தாலும், விளக்கம் அளிக்க தயார் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு பிறகும் 18 மணி நேரம், அவரை அடைத்து வைத்திருந்தார்கள். யாரையும் சந்திக்க அனுமதி வழங்கவில்லை. இறுதியாக உடல் நிலை மோசமாகி, இதய வலி வந்த பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டப்பட்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கு அப்படி என்ன அவசர நிலை இங்கே உள்ளது ? அப்படியொரு அவசர நிலையில்தான் நாடு இருக்கிறதா? ஆனால் அமலாக்கதுறையின் நடவடிக்கை அப்படிதான் இருக்கிறது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் பாஜக அதன் அரசியலை அமலாக்கத்துறையை வைத்து செய்ய நினைக்கிறது. மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்புவதற்கும் மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜகவின் அரசியல் மக்கள் விரோத அரசியல்தான். அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை, வரிமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என்ற விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது, பாஜகவின் பாணி. அதுதான் அவர்களுக்கு தெரிந்த ஒரே பாணி. இந்த ஜனநாயக விரோத செயலைத்தான் இந்தியா முழுவதிலும் பின்பற்றுகிறார்கள். ’ஒரே ஒரு ஸ்கிரிட்டுதுதான் வெவ்வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிவசேனா கட்சி எதிர்த்தால் சஞ்சய் ராவத்யை கைது செய்வது. இது மகாராஷ்டிராவில் நடந்தது. ஆம் ஆத்மி எதிர்க்கிறதா டெல்லி மாநில அமைச்சர் மணிஷ் சிசோடியாவை கைது செய்வது. இது டெல்லியில். ராஷ்டிரிய ஜனதா தளம் எதிர்கிறதா பிகாரின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவது. இது பிகார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எதிர்தால், அவரது கட்சிக்காரர்கள் மீது சோதனை செய்வது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரை கைது செய்தார்கள். ஆனால் கர்நாடகாவில் அவர் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராக இருக்கிறார். முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரத்தை கைது செய்தார்கள். தெலுங்கானாவில் அமைச்சருக்கு தொடர்பான இடங்களில் ரைடுகள் நடந்தது. சந்தீஷ்கரில் முதலமைச்சருக்கு தொடர்பான இடங்களில் ரைடுகள் நடைபெற்றன.
ஆனால் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட இடங்களில் மட்டும் இந்த ரைடுகள் நடப்பதில்லை. ஏனென்றால் அங்கெல்லாம் ஆட்சியில் இருப்பது உத்தமபுத்திரன் பாஜக. அந்த மாநிலங்களை பற்றி ஐ.டி, இ.டி, சிபிஐக்கு ஒன்றும் தெரியாது. பாஜகவை எதிர்க்கும் எல்லா கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வீட்டின் உள்ளேயும் பாஜாகவின் துணை அமைப்புகள் சோதனை செய்துள்ளது. அப்படி இல்லை என்றால் அதிமுக போல் அடிமைகளை இதுபோல உதராரணம் காட்டி அடிபணிய வைத்துவிடுவார்கள். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அமலாக்கத்துறை வெறும் 112 ரைடுகளை மட்டுமே செய்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எட்திர்கட்சிகளிடம் பாஜக 3 ஆயிரம் ரைடுகள் நடத்தி உள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது வெறும் 0.05%தான். மற்ற எல்லா ரைடுகளும் மிரட்டல் அரட்டல் உருட்டல்தான் .
ரைடுகளை வைத்து மிரட்டியவர்கள் பாஜகவில் சேர்ந்தால்மட்டும் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படிபட்ட புனிதர்கள் மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்படிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். இங்கிருக்கும் அதிமுகவே அதற்கு ஒரு உதாரணம்தான். அதிமுக ஆட்சியில் செய்த கடந்த 5 ஆண்டுகளிலும் பாஜக இதுபோன்ற ரைடுகளை செய்தது. ஆனால் அதில் எந்த வழக்காவது தாக்கல் செய்யப்பட்டதா? தண்டனை வழங்கபட்டதா? என்றால் இல்லை என்பதுதான் பதில் . தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறையில் அதிமுக அமைச்சர் மீது ஏராளமான புகார் இருக்கிறது. ரைடுகள் நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கொண்டிருக்கிறோம். வழக்கு பதிவு செய்து கொண்டு வருகிறோம். இந்த வழக்குகளில் எல்லாம் விசாரணை நடத்த அமலாக்கதுறை ஏன் வரவில்லை. அதிமுகவின் இந்த ஊழல் பெரிச்சாளிகளைத்தான் டெல்லியில் கூட்டாக அமித்ஷா சந்தித்தார். அவர்தான் ஊழலுக்கு எதிராக தமிழ்நாட்டில் வந்து முழக்கம் எழுப்பிவிட்டு சென்றுள்ளார்.
ஜெயலாலிதாவின் மறைவுக்கு பிறக அதிமுகவை கொத்தடிமை கூடாரங்களாக மாற்றுவதற்கு அமலாக்கத்துறையையும், சிபிஐ-யையும், வருமா வரித்துறையையும் பாஜக பயன்படுத்தியது. அவர்களும் பயந்து, பாஜகவின் கால் அடியில் கிடக்கிறார்கள். இப்படிபட்ட பாதம் தாங்கிய பழனிச்சாமி செந்தில் பாலாஜியை பற்றி குறை சொல்கிறார். இந்த பழனிசாமி அடிமை கும்பல் மாதிரித்தான் மற்ற கட்சிகளை நினைக்கிறது பாஜக தலைமை. ஆனால் அப்படிபட்டதல்ல திமுக. உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் நபர்கள் அல்ல திமுகவினர். சுவற்றில் அடித்த பந்து மீண்டும் வந்து முகத்தில் அடிப்பது போல்தான் ஒவ்வொரு திமுகவினரும் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். நேற்றில் இருந்து கலைஞரின் வீடியோவை திமுகவின் சமூகவலைதளத்தில் பர்கிந்து வருகின்றனர்.
‘என்னை யாரும் அடிக்க முடியாது. நான் திருப்பி அடித்தால் தாங்க மாட்டார்கள்” என்று கலைஞர் பேசியது வைரலாகி வருகிறது. அப்படிபட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள் இருக்கிறது. மதவாதம், சாதியவாதம், சனாதனம் பிறப்பால் உயர்வு -தாழ்வு, மேல் – கீழ். இதுபோன்ற மனித சமூதாயத்திற்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் கலத்தில் எதிர்கொள்வதுதான் எங்கள் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்க தயாராக இருக்கிறோம். அதைவிடுத்து மிரட்டி பணிய வைத்தால் குனிய மட்டோம். நிர்மிந்து நிற்போம். நேருக்கு நேர் சந்திப்போம். நாங்கள் ஆட்சிக்காக கட்சி நடத்துகிறவர்கள் இல்லை. கொள்கைக்காக கட்சி நடத்துகிறவர்கள்.
கொள்கையை காப்பாற்ற கடைசி வரைக்கும் போராடுவோம். இது திமுகவின் வரலாறு. இந்தி எதிர்ப்பு போராட்டம், மிசா காலம் என்று நாங்கள் பார்க்காத அடக்குமுறை இல்லை. நாங்கள் செய்யாத போராட்டங்கள் இல்லை. நாங்கள் செய்த போராட்டங்கள் எப்படி பட்டது என்று வரலாற்றை புரட்டி பாருங்கள் இல்லையென்றால் டெல்லியில் உள்ள சீனியர்களிடம் கேளுங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். திமுகவையோ, திமுகவினைரையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீங்க. எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை. எனது உயிரினும் மேலான கலைஞரின் உடன் பிறப்புகளே, உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்காக நீங்கள் இருக்குறீர்கள். 2024 நமக்கான தேர்தல் களம் காத்துக்கொண்டிருக்கிறது அதில் இவர்களை சந்திப்போம்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! pic.twitter.com/MTA0suBkSh
— M.K.Stalin (@mkstalin) June 15, 2023