அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரசச்னை, செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து மனு அளித்துள்ளனர்.
கவர்னருடனான இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் கூறியதாவது,”வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்பாலாஜி அமைச்சராக தொடருவது சட்டத்துக்குப் புறம்பானது. என்றும், அவர் கைது செய்யப்பட்ட உடனே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், செந்தில்பாலாஜியை தியாகியைப் போல முதல்வரும், அமைச்சர்களும் சித்தரித்து கொண்டு இருக்கிறார்கள்.செந்தில் பாலாஜியை முதலமைச்சர் காப்பது தவறான செயல்.” இவ்வாறு அவர் கூறினார்