உலகநாயகன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய அடுத்த 233 வது படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது சில ஊடகங்களில் கமல்,’இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன் . பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான ’புராஜெக்ட் கே’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு மாத கால்ஷீட்டுக்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் தரப்பட்டதாகவும் ,இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பில் அவர் ஆகஸ்ட் மாதம் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ’புராஜெக்ட் கே’ படப்பிடிப்பில் தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் எச் வினோத் படத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கமல் அடுத்தடுத்து எச்.வினோத்,மணிரத்னம்,பா.ரஞ்சித்,வெற்றிமாறன் உள்ளிட இணயக்குநர்களின் படங்களில் கதையின் நாயகனாக நடிக்க உள்ள நிலையில்,வில்லனாக நடிப்பது சாத்தியமே இல்லை என்கிறது கமல் வட்டாரம். மேலும், கமல் பங்கேற்கவுள்ள பிக்பாஸ் 7 தமிழ் சீசன் வரும் ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையம் மறுப்பதற்கில்லை எனவே கமல் தரப்பிலிருந்து எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதவரை இது போன்று இன்னும் பல செய்திகள் ஊடகங்களில் வலம் வரலாம்