மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன்.
ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கி யுள்ளார். ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோ , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன், இயக்குனர்கள் லியாகத் அலிகான், செந்தில் நாதன், நடிகர் பயில்வான் ரங்கநாதன், நடிகை அக் ஷ யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், நடிகர் ஜெய் ஆகாஷ் பேசியதாவது:
அயோக்கியன் படத்தை பற்றி சொல்ல வேண்டு மென்றால் நான் கதை சொல்ல சொல்ல அதை எழுதுவதற்கு ஒரு எழுத்தாளர் தேவைப் பட்டார். அப்படி ஒரு எழுத்தாளராகத்தான் இயக்குனர் சாய் பிரபாமீனா என்னிடம் சேர்ந்தார். ஆனால் அவருக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியவில்லை. பிறகு எனக்கு உதவியாளராக அமர்த்தினேன். மாமரம் என்ற படம் நான் இயக்குகிறேன் அதில் உதவி இயக்குனராக பிரபா பணியாற்றினார். அமைச்சர் படத்திலும் பணியாற்றினார். அவருக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தேன். ஒருகட்டத்தில் உங்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்றார். சரி, கதை சொல் என்றேன் அதுவும் சொல்லத் தெரியவில்லை. பிறகு நானே யோக்கியன் கதை எழுதி தந்தேன். யோக்கியன் என்றால் யார்? அயோகியனை காட்டினால்தான் யோக்கியனை காட்ட முடியும் . இதுதான் சுருக்கமாக இப்பட கதை. இதுதவிர மொத்தம் 4 கதைகள் இதில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வரவில்லை.
30 இரவுகள் நான் தூங்காமல் ரெடி செய்ததுதான் இந்த யோக்கியன் ஸ்கிரிப்ட். சாய் பிரபாமீனா இயக்குன ராக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை கொடுத்தேன். தற்போது சிறிய படங்களுக்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள். அதனால் எனது ஒ டி டி யில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தேன் ஆனால் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று இயக்குனர் கேட்டார் அதனால் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. நான் டி வி சீரியல், ‘நீதானே என் பொன் வசந்தம்’ நடிக்கி றேன் அதில் நிறைய ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.
அவர்கள் என் படம் பார்க்க தியேட்டருக்கு வருவர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார் .