பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் இயக்குனர் பார்த்திபன் தொடர்ந்து மூன்று படங்களை இயக்கவுள்ளதாக கூறியிருந்தார். அதன்படி முதல் படத்திற்கு ‘52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்றும், இரண்டாம் படத்திற்கு ‘ஆண்டாள்’ என்றும் பெயரிட்டிருந்தார். மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை இன்னும் அவர் வெளியிடவில்லை. பார்த்திபன் தன் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கான இடங்களைத்தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்,
பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர் ரகுமான் இப்படத்துக்கு இசையமைப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஏ.ஆர். ரகுமான் பார்த்திபனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில்,” “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் அதிக வேலை உள்ளதால் உங்கள் படத்தை இந்த முறை ஏற்க முடியவில்லை. உங்கள் கதைகளை ஆர்வத்துடன் கேட்டு நான் வியந்திருக்கிறேன். திறமையான ஆளுமை இயக்குனர்களில் நீங்களும் ஒருவர்.. உங்கள் படத்திற்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவை பார்த்த பார்த்திபன் தனது ஸ்டைலில் , “பழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால்…. ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை! வரும் படத்திலும்-இரு வரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் ஏ ஆர் ஆர் அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்.” என்று குறிப்பிட்டு ஏ ஆர் ரஹ்மான் அனுப்பிய மின்னஞ்சலையும் இணைத்து பதிவிட்டுள்ளார் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.