தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துக்கொண்டு இருப்பவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.!
“இயக்குவதில் இருந்து விலகப்போவதாக “அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.
“அதிக அளவில் படங்கள் பண்ண வேண்டும் என்கிற ஆசை எனக்கு இல்லை .அத்தகைய திட்டத்துடன் நான் வரவில்லை. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பது தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் பிடித்திருந்தது.அதனால் என்னால் சாதிக்க முடிந்தது .பத்துப் படங்கள் பண்ணிவிட்டு நான் விலக போகிறேன்“என்பதாக அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ,
2017 -ல் மாநகரம் வழியாக திரைக்கு வந்தார். கார்த்தி நடித்த கைதி லோகேசுக்கு உயர்ந்த இடத்தை அளித்தது.அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் வசூல் மன்னன் என்கிற அடையாளத்தை தந்தது. அதன் தொடக்கம்தான் தளபதி விஜய்யின் ‘லியோ’.
இவரது இயக்கத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி விரும்புகிறார் என்பது சிறப்பு செய்தி.