தளபதி விஜய் பிறந்த நாளன்று வெளியான ‘லியோ’ போஸ்டர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது என்பது மறுக்கமுடியா உண்மை.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அந்த போஸ்டர் பல ரகசியக் குறியீடுகளை உள்ளடக்கியிருந்தது. ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் ‘ என்கிற அவரது தனித்த முத்திரைகள்தான் அவை.
அதே நேரத்தில் வெப் சீரியலான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் ‘போஸ்டர்தான் லியோ போஸ்டர் உருவாக உதவியிருக்கிறது .காப்பி அடித்து இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இரண்டுக்கும் விசித்திரமான ஒற்றுமை இருக்கிறது என சொல்லலாம். !!சினிமாவில் இதெல்லாம் சாதாரணம்.அட்லீ ஆங்கில கதைகளை சுடும் போது போஸ்டரை பிரதி எடுப்பது தவறில்லையே!
ஆங்கில படத்தில் ஜான் ஸ்னோ ,லியோவில் ஜோசப் விஜய் .தட்ஸ் ஆல் .!இரண்டு போஸ்டரிலும் கழுதைப்புலி பொதுவாக இடம் பெற்றிருக்கிறது.
சிங்கத்துக்கும் ,கழுதைப்புலிக்கும் ஆகவே ஆகாது. ஆனால் கழுதைப்புலிகளின் கூட்டம் வந்தால் சிங்கம் தன்னுடைய இரையைக் கூட விட்டுவிடும். ஓடிவிடும் என்பது இயல்பு.
இந்த போஸ்டரில் விஜய்யின் முகத்தில் கோபத்தின் உச்சம் காண முடிகிறது. கொழுந்து விட்டு எரிகிற தீயின் ஜ்வாலை !கையில் ரத்தம் தோய்ந்த சம்மட்டி.!கழுதைப்புலியின் பின்னணியில் தெறித்து பறக்கிற கோரைப்பற்கள்.!பின்னணியில் பனியின் திறனும் இருக்கிறது.மிகவும் மங்கலாக கை விரல்களும் தெரிகிறதே!
யாருடைய கை ?
பறக்கிற பற்கள் எவருடையது?
இங்கேதான் எல் சி யூ இருக்கிறது?
விக்ரம் வில்லன் விஜய் சேதுபதியின் தங்கப் பல்லாக இருக்குமோ? அந்தப் பல்தான் ஊக்கம் சுரக்க வைக்கும் அந்த படத்தில்.!அல்லது கழுதைப்புலியின் பற்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.மனித பற்களாக இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் குறியீடாகத்தானே அந்த பற்கள் பறக்கின்றன.
நெருப்பு…பனி ..எல் சி யூ இவைகளின் கலவையாக லியோ இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது அந்த பிறந்த நாள் போஸ்டர்.!