டன்ஸ்டன் இன்டர்நேஷனல் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ இருளில் ராவணன் என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.
இதில் முதல் படத்திலேயேஅதிரடியாக மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் புதுமுகம் துஷாந். பத்து என்றதுக்குள்ள, ரங்கூன் போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.’மெமரீஸ்’, ‘க்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆர்.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் ஏ வி எஸ்..சேதுபதி.இப்படம் குறித்து கூறுகையில்,”முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் படமாக இருவாக்கியுள்ளோம். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மிக விரைவில் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட உள்ளது என்கிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி..பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார்.