நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ப்ராஜெக்ட் கே. படத்தில்பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல் ஹாசனை நடிக்க வைக்க,அப்படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் ஹாசன் நடிக்கிறார் என போஸ்டர் மற்றும் வீடியோவை அதிகாரபூர்வமாகவே வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.,இப்படத்திற்காக கமல் 30 நாட்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம்.
முன்னதாக ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் நடிக்க கமல் ஹாசனுக்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது கமல் ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் கே.ஹெச். 233 படத்தில் நடிக்கிறார். ஹெச். வினோத் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனை தொகுத்து வழங்கவுள்ளார் இதற்கிடையே கமல் ஹாசன், ப்ராஜெக்ட் கே படத்திற்கு 30 நாட்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளது அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கி உள்ளது.