இப்போது அப்புக்குட்டி சென்னையில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த வீட்டை அஜித் தான் அவருக்கு கட்டித்தருவதாக கூறி சிலர் சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பி வருகிறார்களாம். காகித கப்பல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை ரேஸ்கோர்ஸ் அரங்கத்தில் நடந்தது.இப் ப டத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் அப்புக்குட்டி. அவரிடம் இதுபற்றி கேட்டபோது மனிதர் பொங்கிவிட்டார்..
“அஜித் எனக்கு வீடு கட்டித்தரவில்லை.. நான் சினிமாவில் நடித்து சம்பாதித்த காசில் தான் சொந்தமாக வீடு கட்டுகிறேன்.. அதேபோல நான் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என செய்தி பரப்புகிறார்கள்.. பணம் வாங்காமல் யாராவது நடிப்பார்களா..? சினிமாவுக்கு வந்ததே பணம் சம்பாதிக்கத்தானே.. அதனால் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை யாரும் ப ரப்பாதீர்கள்” என குமுறிவிட்டார்