எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி, கஜினி, போக்கிரி என பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அசின் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆரின் என்கிற 5 வயது மகள் உள்ளார்.இந்நிலையில், தற்போது அசினின் கணவர் ராகுல் சர்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசின் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும்,இதையடுத்து அசின் தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், வட இந்திய மீடியாக்களில் செய்தி வெளியானது,
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாக அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்பதிவில்,”நாங்களே ஜாலியாக சுற்றுலா வந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு என்றும், உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது ட்ரை பண்ணுங்க இதுக்கே எனக்கு 5 நிமிடம் வேஸ்ட் என நடிகை அசின் விவாகரத்து வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.