டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரெயிலில் உள்ள கேன்டீனில் வேலைபார்க்கும் இளைஞன் பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் (பூஜா ஜாவேரி) டச்சப் பெண் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). முதல் பார்வையிலேயே கீர்த்தியின் மீது காதலைப் படர விடுகிறார் தனுஷ். ஆரம்பத்தில் பிடி கொடுக்காத கீர்த்தி ஒரு கட்டத்தில் மனம் மாறுகிறார். அதே ரயிலில் மத்திய அமைச்சர் ராதாரவி பயணம் செய்கிறார் . அப் பயணத்தோடு ஓய்வு பெறவுள்ள ரயில்எஞ்சின் டிரைவர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் திடீரென மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் ரெயில் சென்னை நோக்கி புறப்படுகிறது. திடீரென எஞ்சின் டிரைவர் ஆர்வி.உதயகுமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைகிறார்.இதனால் ரயில்,டிரைவரின் கட்டு[பாட்டை இழந்து தறிகெட்டு ஓடுகிறது. அந்த ஆபத்தில் இருந்து பயணிகள் உயிர் பிழைத்தார்களா !இல்லையா? தனுஷ், கீர்த்தி காதல் என்ன ஆனது? இது தான் தொடரியின் மீதிக்கதை! எஞ்சின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ரயிலைப்போலவே இதன் திரைக்கதையும் தறிகெட்டு ஓடுகிறது. அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க படம் பார்க்க வந்தவர்களும் துண்டைக்காணோம் துணியைக்கானோம் என திரையரங்கை விட்டு ஓடி விடுகிறார்கள். அவர்களைப்போலவே நாமும் தப்பி ஓடிவிட்டோம்.