நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் இன்று, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடந்தது.
விழாவில் சிரஞ்சீவி மற்றும் உபாசனா குடும்பத்தினர் மற்றும் திரளான திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் தன்னுடைய பேத்திக்கு வைக்கப்பட்ட பெயர் குறித்து மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதளத்தில் குழநதைக்கு கிளின் காரா கோனிடாலா என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும்,வித்தியாசமான இந்தப் பெயர் லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், தூய்மையான வலிமையால் உண்டாகும் ஆன்மீக எழுச்சியை இந்த பெயர் குறிப்பதாகவும், அவள் வளரும்போது இந்த பண்புகளும் அவளுக்குள் வளரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.