Aandavan Kattalai
Director: K Manikandan
Cast: Vijay Sethupathi, Ritika Singh, Pooja Devariya, Nasser
Rating:4/5
காக்கா முட்டை, குற்றமே தண்டனை படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் நல்ல பெயரை சம்பாதித்துள்ள மணிகண்டன் இயக்கியுள்ள படம் என்பதால ‘ஆண்டவன் கட்டளை’ நம் மனதில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை இயக்குனரும் வீணடிக்கவில்லை. மதுரை அருகே யுள்ள கிராமத்திலிருந்து கடன் தொல்லையால் நெருக்கடிக்கு ஆளான காந்தி (விஜய் சேதுபதி), நண்பன் பாண்டியுடன் (யோகி பாபு) சென்னைக்கு வருகிறார்.எப்படியாவது சுற்றுலா விசாவில் லண்டனுக்குப் போய், அங்கே வேறு அடையாளத்துடன் ஒளிந்து வாழ்ந்து, பணம் சம்பாதித்து ஊர் திரும்புவதுதான் இவர்கள் நோக்கம். அதற்காக சென்னை வந்து பாஸ்போர்ட்மற்றும் விசாவுக்காக குறுக்கு வழியை நாடுகிறார்கள். .
போலி முகவரின் பேச்சைக் கேட்டுப் பல பித்தலாட்டங்கள் செய்து பாஸ்போர்ட் பெற்று விடுகின்றனர் அதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன…. அவர்களின் எண்ணம் ஈடேறியதா இல்லையா? என்பதே ‘ஆண்டவன் கட்டளை’யின் பரபரப்பான திரைக்கதையாக்கபட்டுள்ளது,
அருள்செழியனின் கதைக்கு, இயக்குநர் மணிகண்டன், அணுசரண் ஆகியோர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். போலி ஆவணங்களால் ஏற்படும் பிரச்சினைதான் படத்தின் மையக்கருத்து. குறுக்குவழியை நாடினால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை மிக அருமையாக மக்களுக்கு எடுத்து சொல்லியுள்ளார் இயக்குனர். இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை, சென்னையில் வாடகைக்கு வீடு தேடுபவர்களின் அவலம், குடும்ப நல நீதிமன்றச் சூழலின் யதார்த்தங்கள் ஆகியவை கதைப் போக்கில் இயல்பாகவே கலந்துவிடுவதால் திரைக்கதை மிக மெதுவாக நகர்ந்தாலும் நம்மால் பொறுத்து கொள்ள முடிகிறது.பொறுத்து கொள்ள முடிகிறது. விஜய் சேதுபதி வழக்கம் போலவே இப்படத்திலும் தனது வெற்றிகோடியை நாடியுள்ளார். மிக இயல்பாக நடித்திருக்கிறார் விசா மறுக் கும் அதிகாரியிடம் கெஞ்சும் காட்சி, குடிபெயர்வுத் துறை புலனாய்வு அதிகாரியிடம் பாண்டிக்கு என்னா சார் ஆச்சு? பதைபதைப்புடன் விசாரிப்பது, ரித்திகாவிடம் காதலைச் சொல்வது,தன்னால் ரித்திகாவுக்கு ஏற்படும் பிரச்னையை தன் முகத்தில் பிரதிபலிப்பது என பல இடங்களிலும் முத்திரை பதிக்கிறார்.ரித்திகா சிங், துணிச்சலும் தன்னம்பிக்கையுள்ள ஒரு பெண் (கார்மேகக் குழலி)பத்திரிகையாளராக அற்புதமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.யோகிபாபுவின் காமெடி காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம் இலங்கைத் தமிழராக வரும் அரவிந்தனின் நடிப்பும் மனதில் நிற்கிறது. வழக்கறிஞர் ஜார்ஜும், அவரது உதவியாளர் விநோதினியும் கலகலக்க வைக்கிறார்கள். நாசர், பூஜா தேவரியா நிறைவு.ஒளிப்பதிவு, எடிட்டிங் கச்சிதம்.சில இடங்களில் படம் மெதுவாகவும்,நாடகத்தனமாக தோன்றுவதையும் இயக்குனர் தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ அழகான படைப்பு! நம் மனதில் ஆழமாகவே பதிந்து விடுகிறது.