நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதில் ரஜினிகாந்த் , முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், ‘இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதனை படக்குழுவினர் தற்போது வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில்,
இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத்திடம், ‘வார வாரம் இப்படியே கேட்டா எப்படி?எத்தனை வாரம் கேட்டாலும் நீங்க தான் மியூசிக் பாட்டு தரேன்னு சொன்னீங்களே, எங்கே? என கேட்பது போல் இடம்பெற்றுள்ளது..
.@anirudhofficial andha first single…?? ⏳⏰#JailerUpdate @Nelsondilpkumar pic.twitter.com/9Ytc636nDj
— Sun Pictures (@sunpictures) July 1, 2023