விஜய்சேதுபதி நடிப்பில் ரத்தின சிவா இயக்கியுள்ள திரைப்படம் ’றெக்க’. இப்படத்தில் விஜய்சேதுபதி அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அடுத்த மாதம் 7 ஆம் தேதிவெளியாகவுள்ள இப்படம் குறித்து . விஜய்சேதுபதி பேசியதாவது,
எனது நடிப்பில இரண்டு வாரத்துக்கு ஒரு படம், மாதத்துக்கு ஒரு படம் வெளியாகிறது என்ற முறையில்சிலர் மீம்ஸ் பண்ணுகிறார்கள்! இது என் தப்பு கிடையாது. தானா அமைகிற விஷயம்! ஆனால் நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை!
‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகி இரண்டு வார இடைவெளியில் தான் ‘றெக்க’ வெளியாகவிருக்கிறது. ஆனால் இப்படம் நான் இதுவரை நடித்த படங்களிலிருது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். அது மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட்டை தான் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரத்தின சிவா. இந்த ஸ்கிரிப்ட்டை என்னிடம் வந்து சொன்னதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். காரணம் இதில் நான் இதுவரை செய்திராத பல விஷயங்கள் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அது என்ன என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். சொல்லப் போனால் இந்த ‘றெக்க’ எனக்கு ஒரு வித போதையை தந்த படமாகும். காரணம் இதில் என் கேரக்டர் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. அதனால் மிகவும் ரசித்து நடிக்க முடிந்தது. அந்த சந்தோஷத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்த தான் போதை என்ற வார்த்தைய குறிப்பிட்டேன். மத்தபடி வேறு எதுவும் இல்லை (சிரிக்கிறார்). இந்த படமும் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ஆயுதபூஜை விடுமுறையை இப்படத்துடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள்’ என்கிறார் விஜய்சேதுபதி!