பேஷன் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில், அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சக அதிகாரிகளாகவும் நடித்து, இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘நிபுணன்’ படத்தில் ரசிகர்களாகிய நீங்களும் ஒரு காட்சியில் தோன்றலாம் என்கிறார் இயக்குநர் அருண் வைத்யநாதன். அவர் கூறியதாவது,இத் திரைப்படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் அதிர்ச்சியான ‘லைவ் நிகழ்வு’ ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சிக்காக உங்கள் கைப்பேசியின் வாயிலாக உங்களின் சற்று அதிர்ச்சியான முகபாவனையோடு உங்கள் ஊர், நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான லேன்ட்மார்க்கின் அருகில் நின்று உங்களுக்கு பின்புறம் அமையும்படி, தெளிவாக காணொளி ஒன்று பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்க. சிறந்த வீடியோ பதிவை நாங்கள் எங்கள் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பயன்படுத்துவோம் என்கிறார்..