தமிழ் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பொதுவாக தமன்னா வருவது இல்லை என்கிறார்கள்.. ஆனால் தெலுங்கு, இந்தி படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொள்வதாகவும் இதனால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் தமன்னா மீது கோபத்தில் உள்ளனராம் இந்நிலையில்,சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் தமன்னா இணைந்து நடித்திருந்தார். ஆனால்,இப் படத்தை விளம்பரப்படுத்தும் எந்த ஒரு விழாவிலும் தமன்னா கலந்து கொள்ள வில்லை எனக் கூறபடுகிறது. இந்நிலையில் அவர் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்துள்ள ‘தேவி’ பட புரமோசன் விழாவிற்காக கடந்த 27ம் தேதி சென்னை வந்தார். தான் தயாரித்த படவிழாவிற்கு வராத தமன்னா தேவி பட புரமோசன் நிகழ்விற்கு வந்தது தர்மதுரை தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேசுக்கு கடும் கோபத்தையும் எரிச்சலையும் கிளப்பிவிட, இது தொடர்பாக தமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.