உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி.. ஒரு சாதரண ரயில்வே டிக்கெட் பரிசோதகர் எப்படி இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார், என்பதை சொல்லும் படம்.இப்படம்,பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில், வெளியாகியுள்ளது. ராஞ்சியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த மகேந்திர சிங் தோனி, பள்ளி கிரிக்கெட் அணிக்காக விக்கெட் கீப்பராக தனது வாழ்க்கையைத் துவங்கி, மெல்ல மெல்ல வளர்ந்து மாநில அணிக்குள் எப்படி நுழைகிறார்… பின்னர், தன் குடும்ப பொருளாதார சூழ்நிலையால் ரயில்வேயில் டிக்கெட் கலெக்ட்டராக தள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து எப்படி இந்திய அணியில் இடம்பிடித்து, கோடான கோடி இந்திய ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்தார் என்பதே இப்படத்தின் கதை.எம்.எஸ்.தோணி . கிரிக்கெட் போட்டியில் பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்ற ஒரு சக்சஸ்புல் மனிதராக மட்டுமே நமக்குத்தெரியும் ஆனால், தோனியின் வாழ்க்கையில் அவர் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்தார் என்பதையும், அவர் வாழ்க்கையில் நடந்த இன்பம், துன்பம், காதல், மோதல் என நமக்கு தெரியாத பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கும் படம் தான் இந்த எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி.தோனி கிரிக்கெட் உலகிற்கு எப்படி வருகிறார் முதல் உலக கோப்பையை எப்படி வெல்கிறார் என்பதே இதன் அழகான திரைக்கதை.தோனி’ கதாபாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் நல்ல தேர்வு!தோனியின் அப்பாவாக அனுபம் கெர், அக்காவாக பூமிகா சாவ்லா, ‘கோச்’சாக ராஜேஷ் ஷர்மா ஆகியோரும் நடிப்பும் யதார்த்தமாக அமைந்துள்ளது.தோனியின் வாழ்க்கையில் நாம் அறியாத ஒரு காதல், சாக்ஷிக்கு முன் வரும் காதல், அதன் சோகமான முடிவு என பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. இசை, ஒளிப்பதிவு கச்சிதம்.படத்தின் நீளம் மட்டுமே, கிரிக்கெட் அறியாத ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்மொத்தத்தில் சாதாரண மனிதன் சரித்திர நாயகன் ஆன கதை பரவாயில்லை ரகம் தான்!