இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. கதையின் நாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்கு போட் என பெயரிடப்பட்டுள்ளது.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் முற்றிலும் மாறுபட்ட அழுத்தமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வரும் யோகி பாபு இப்படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் .
முழுக்க முழுக்க நடுக்கடலில் அதிரடி காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ உடன் கூடிய அறிவிப்பை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இப்படம் இலங்கையில் தமிழகம் வரும் அகதிகளை பற்றியதாக இருக்கலாம் என்கிறார்கள்.