.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். மேலும் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் மற்றும் அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் பொன்முடியை அவரது வீட்டில் இருந்து நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி அவரது மகன் அசோக் இருவரும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அமைச்சர் பொன்முடி எந்நேரமும் கைது செய்யப்[படலாம் என கூறப்படுகிறது.