சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் புதிய படம்,‘ஜெயிலர்’ இப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் ’காவாலா’ பாடல் வெளியாகி வைரல் ஆன நிலையில்,இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் ’ஹூக்கும்’ என்ற பாடல் வெளியாகிஇணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அனிருத் கம்போஸ் செய்து பாடியுள்ள இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.ரஜினியின் பெருமைகளை கூறும் வகையில் இப்பாடலின் வரிகள் அமைந்துள்ளது
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு வரும் ஜூலை 28ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்விழாவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.