இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டபடைப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’ இப் படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
இவர்களுடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில், சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில்,அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் ‘புராஜெக்ட் கே’ படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் கமல்ஹாசன், பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் உள்பட புராஜெக்ட் கே படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்துக்கு ‘கல்கி 2898 AD’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் ‘ஸ்டார் வார்ஸ்’, ‘ட்யூன்’ பாணியிலான காட்சியமைப்புகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப் படத்தில் பசுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.