கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் நடந்தது முடிந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனதாக அறிவித்தனர் .
இந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் உயிர் – உலகம் என குறிப்பிட்டு உயிர் ருத்ரோநீல் என். சிவன், உலக் தெய்விக் என். சிவன் என பெயரிட்டனர்.இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவ்வப்போது தனது குழந்தைகளோடு நடிகை நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது இயக்குனர்களுக்கு சிவன் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் வைரலாகி இருக்கிறது. நடிகை நயன்தாரா தனது செல்ல மகனை கையில் ஏந்தி கொஞ்சும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், “எனது உயிர்கள்… ஞாயிற்றுக்கிழமை நல்லபடியாக நகர்ந்தது… முழுக்க முழுக்க அன்பு மற்றும் எளிமையான தருணங்களோடு மட்டும்…” இவ்வாறு அவர் பதிவிட்டு இருக்கிறார்.