பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான நாராயண் தாஸ் கே. நாரங்கின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51வது படம் குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் மூலம்தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் நடிகர் தனுஷ்,இணைய உள்ளார்.
தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படம்,தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பன்மொழி படமாக உருவாகிறது.
. மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.