Movie: Remo
Cast: Sivakarthikeyan, Keerthy Suresh,
Rating; 2/5.
சினிமாவில் நடிகராக வேண்டும் என ஆசைப்படும் சிவகார்த்திகேயன், டாக்டரான கீர்த்தி சுரேஷை கண்டதுமே காதலில் விழுகிறார். மறுநாளே தன் காதலை கீர்த்தியிடம் சொல்வதற்காக அவரின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கீர்த்திக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் வாழ்கையே வெறுத்துப் போன நிலையில் , தன் கவனத்தை நடிப்பின்மீது திருப்புகிறார். ஒரு பெண்ணாக கெட்அப் சேஞ்ச் செய்து நர்ஸ் வேடத்தில் சான்ஸ் கேட்க சென்று வீடு திரும்பும்போது, பஸ்ஸில் மீண்டும் கீர்த்தியைப் பார்க்கிறார். சிவகார்த்திகேயனை உண்மையான பெண் நர்ஸ் என்ற நம்பிவிடும் கீர்த்தி, தான் வேலைபார்க்கும் மருத்துவமனையிலேயே அவருக்கு நர்ஸ் வேலையும் வாங்கித் தருகிறார்.அதன்பிறகு அந்த நர்ஸ் வேடத்திலேயே கீர்த்தி சுரேஷின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயல்கிறார். இதன் பிறகு என்னென்ன நடக்கின்றன என்பதை கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து ‘ரெமோ’வாக்கி உலவ விட்டுள்ளனர் .
இன்னொருவருக்கு நிச்சயமான பெண்ணை ஹீரோ காதலிப்பது, இன்னும் எத்தனை படங்களில் இதையே காட்டி
சாகடிக்கப்போகிறார்களோ தெரியவில்லை! ஏற்கனவே ஒருதலைக்காதலில் பல கொலைகள் தமிழ்நாட்டில் இப்ப இது வேறவா? என பதறத்தான் செய்கிறது மனம். நர்ஸ் வேலையே தெரியாமல் தனியார் மருத்துவமனையில் சமாளிக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகள் படம் முழுவதும்.5 நிமிடங்களுக்குள் பெண் வேடத்தை மாற்றிக்கொண்டு 3 நாள் சவரம் செய்யப்படாத முகத்துடன் நாயகன் தோன்றுவது என நம் காதுகளில் சரம், சரமாய் பூவைச் சுற்ற நமக்கு மயக்கம் வராத குறை. இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல் திரையரங்குகளில் ரசிகர்களின் பருத்திப்பால் சத்தம் காதை பிளக்கிறது.கதையின் மையமான காதல் வலுவாகச் சொல்லப்படாததால் சிவகார்த்திகேயனின் உழைப்பு வீழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.இது மாதிரி ‘சிவா’ இரண்டு படங்கள் நடித்தால் ‘மிர்ச்சி சிவா’வாகி விடலாம்!