கார்த்தியின் சர்தார் 2 இந்த ஆண்டு அரங்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது .
பொதுவெளியில் சர்தார் சக்கைப்போடு போட்டு சாறு எடுக்கப்பட்ட படம்.அத்தனையும் பணம்.பணம் என்பது அனைவருக்குமே தெரிந்த பரம ரகசியம்.!!!
இரண்டாம் பாகம் எடுக்காமல் இருப்பார்களா?
சர்தாரில் இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் ,வரக்கூடிய இரண்டாம் பாகத்திலும் இருப்பாரா ,இசை அமைப்பாரா?
சந்தேகம் என்கிறார்கள்.
கார்த்தி ,மித்ரன்,யுவன் இணைகிறபோது ,இவர்களுக்கு அது மூணாவது படம் .!
சர்தார் என்கிற சந்திரபோஸாகவும் ,இவரது மகன் விஜய் பிரகாஷாகவும் இரண்டு கேரக்டர்களில் முட்டி மோதிக் கொள்ளப் போகிறவர் கார்த்தி.
சர்தார் முன்னாள் ரா ஏஜென்ட். விஜய் பிரகாஷோ கடமை துடிப்புள்ள போலீஸ் அதிகாரி. கடுமையான எதிரியாக பாலிவுட் சங்கி பாண்டே. ( பிஜேபி சங்கி இல்லை என்பதை நினைவில் கொள்க.) ராசி கன்னா ,ரஷிசா விஜயன் இருவரும் நாயக நடிகர் கார்த்தியின் மாடப்புறாக்கள்.!உயர்ந்த மாடங்களில் வாழ்கிற வகையல்லவா!
இவர்கள் தவிர லைலாவும் இருக்கிறார்.