ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷெராப்,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது ஜெயிலர் திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் ‘காவாலா’, ‘ஹுக்கும்’, ‘ஜுஜுபி’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.
இதையடுத்து இப்படத்தின் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த டிரெய்லரில் ரஜினியின் (டைகர் முத்துவேல் பாண்டியன்) மிரட்டலான தோற்றமும், அவர் பேசும் வசனங்களும் இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. ’
ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது… வீச்சுதான்’ என்கிற மாஸ் வசனமும், எதிரிகளை பந்தாடும் ரஜினியிடம்,‘இத்தோடு நிறுத்திக்களாமே என ரம்யாகிருஷ்ணன் கேட்க,.. ரொம்ப தூரம் போயிட்டேன்.. முடிச்சிட்டுத்தான் வருவேன்’ என்கிற வசனமும் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நீ அவனை பார்த்தது ஒரு போலீஸ் காரனோட அப்பனா, ஆனா, நீ பாக்காத ஒன்ன நான் பாத்துருக்கேன் என வில்லன் ஜாக்கி ஷெராப் சொல்லும் போது (பாட் சாவின் பிளாஷ்பேக் மாதிரி) எக்கசக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது.