கடந்த 2015ல் அருள்நிதி நடிப்பில்,அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம், ‘டிமான்ட்டி காலனி’.இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது ‘டிமான்ட்டி காலனி 2’ ம் பாகம் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் .உருவாகி வருகிறது.
இதில், அருள்நிதியுடன், பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.முந்தின பாகத்தின் தொடர்ச்சியாக டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார் அஜய் ஞானமுத்து.இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.