தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள இலியானாவுக்கு தற்போது 36 வயதாகிறது. திரையுலகில் பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில், அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான தி பிக் புல் படத்துக்கு பின்னர் புதிய படங்கள் எதையும் கமிட் செய்யாமல் இருந்து வந்தார்.
இதற்கிடையே இலியானா, லண்டனைச் சேர்ந்த மாடல் நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இலியானா, கர்ப்பமாகி விட்டேன் என்பதை அறிவித்து இருந்தார் திருமணத்துக்கு முன்பாகவே கர்ப்பமா? என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்
நடிகை இலியானாவும் தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை ரகசியமாக பாதுகாத்து வந்தார். ஒரு கட்டத்தில் காதலரின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அந்த இனிய நாளுக்காக காத்திருக்கிறேன் ஒரு பெண் கர்ப்பவதி எவ்வளவு சுகம் தெரியுமா அனுபவித்து பார்த்தல் தெரியும் என்றும் பதிவிட்டு இருந்தார்
இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது என்றும், அந்த குழந்தையின் பெயர் அந்த குழந்தைக்கு ‘கோவா பீனிக்ஸ் டோலன்’ என பெயரிட்டு உள்ளதாகவும், குழந்தையின் அழகிய புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.கோவா என்பது தான் குழந்தையின் பெயர் என்றும் பீனிக்ஸ் டோலன் என்பது இலியானாவின் பார்ட்னர் பெயராகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.