கடந்த சில வருடங்களாகவே புகைந்து கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை சூப்பர்ஸ்டார் என சீனியர் திரையுலக பிரபலங்கள் புகழ்ந்த போது வெளிப்படையாகவே வெடித்தது.அன்று தொடங்கிய சூப்பர்ஸ்டார்’ பஞ்சாயத்து காரணமாக ரஜினி ரசிகர்களுக்கு,ம் விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான மோதல் சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.
இந்நிலையில்,ஜெயிலர் பட பாடல்களில் இடம்பெற்ற சில வரிகள் விஜய்யை குறி வைத்தே ரஜினியின் ஆசைப்படியே எழுதப்பட்டுள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.
மேலும் ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில், காக்கா கழுகு என ரஜினி சொன்ன குட்டி கதைக்கு பின் சூப்பர் ஸ்டார் விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல விஜய் ரசிகர்கள் தெருக்களில் போஸ்டர் அடித்து ஓட்டும் அளவுக்கு ஆகி விட்டது.
மதுரையில் விஜய் ரசிகர்கள் ரஜினியை தாக்கி,போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.அதில்,ரஜினியை தாக்கி, விஜய் புகைப்படத்துடன் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..