தளபதி விஜய் .ஜெனிலியா,பிபாஷா பாசு மற்றும் பலர் நடித்திருந்த படம்தான் சச்சின்.
கலைப்புலி தாணு தயாரிப்பு. இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கிய முதல் படம்.
பிபாசா பாசு என்றால் கிளாமர் டால் என்றுதான் ஜொள்ளுவார்கள்.! கவர்ச்சிக்கு என்று வாழ்ந்த இந்த நடிகையின் வாழ்வில் காதலர்கள் சிலர்.ஜான் ஆபிரகாம் என்கிற நடிகர் நீண்டகால காதலராக இருந்தார்.இவரை கைவிட்டுப்போனபின்னர் கணவராக ‘சீட்’பிடித்திருப்பவர் கரன்சிங் குரோவர்.
வாழ்க்கை மகிழ்ச்சியாக கடந்து கொண்டிருக்கிறது. புதிய வரவாக பெண் குழந்தை,ஆனந்தமாக கொண்டாடியவர்களுக்கு இடையில் ஒரு துயரம் !
சிசுவின் இதயத்தில் 2 ஓட்டைகள்.!
கணவரும் மனைவியும் நொறுங்கிப் போனார்கள்.
வேறு வழி எதுவும் இல்லாமல் 3 மாத சிசுவுக்கு அறுவைச் சிகிச்சை .
அவர்கள் நம்பிய இறைவன் நல்லருளால் சிசு நன்றாக இருக்கிறது. வாழ்த்துவோம்.