சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்திற்காக நன்றி சொல்லும் விழா என்ற பெயரில் ரெமோ குழுவினர் நேற்று சென்னையில் விழா ஒன்றை நடத்தினார்கள். அட,புதுசா இருக்கே என,இதில் செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், கலந்து கொண்டனர். அதே போல்ரை இவிழாவிற்கு பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அழைத்து வரப் பட்டிருந்தனர்.
இவ்விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், படக்குழுவினரை பாராட்டி பேசியவர், திடீரென டிராக் மாறி, “நாங்க என்ன செஞ்சோம், எங்கள ஏன் வேலை செய்ய விட மாட்றீங்க . சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையிலான படத்தில் தான் நடித்து வருகிறேன், அப்படி இருந்தும் எனது படத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள். என்னை வேலை செய்ய விடுங்க என வே ண்டுகோள் விடுத்ததோடு, நான் எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் உண்மையாக இருக்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்கும் போராடுகிறேன். யார் ஹிட்டையும் திருடி வரவில்லை” என்று உறுக்கமாக பேசியதோடு, கண்ணீர் விட்டு அழுதும் விட்டார்.
சிவகார்த்திகேயனின் இந்த அழுகை வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி யது. அதே சமயம், அவரது அழுகைக்கான பின்னணி குறித்து தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது,இரண்டு பெரிய படநிறுவனங்களில் எதிர்நீச்சல் பட சமயத்தில் அட்வான்ஸ் வாங்கி விட்டு தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியதோடு அவர்களின் படங்களில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது
இதையடுத்து, அப்படநிறுவனங்கள் தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாயத்து வைத்து விட்டதோடு , தொடர்ந்து அவரின் படங்களுக்கு ‘ரெட்’ போடவும் முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் படம் வசூல் ரீதியாக பின்தங்கி விட ,தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்ஆச்சே அங்கே டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்த கையாளப்படும் யுக்தியை சிவகார்த்திகேயன் தனது விழாவிலும் கடைபிடித்ததாக கூறப்படுகிறது . இது அவர்களுக்கு மிக நன்றாக கை கொடுத்துள்ளதாகவும் கோடம்பாக்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.